News March 29, 2024
அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப்பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Similar News
News August 10, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
News August 9, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) 198.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பம்பர் டேமில் அதிகபட்சமாக 70.00 மி.மீ மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து நெடுங்கல் 34.00 மி.மீ, ஊத்தங்கரை 28.0 மி.மீ, போச்சம்பள்ளி 21.80 மி.மீ, மற்றும் பர்கூரில் 21.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
News August 9, 2025
கிருஷ்ணகிரிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உட்பட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க.