News January 22, 2025

அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம்!

image

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பது துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், பக்தர்களுக்கு உணவு வழங்க முறையாக அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்கிய பிறகு இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 26, 2025

திண்டுக்கல்: கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

image

திண்டுக்கல் அருகே ரியல் எஸ்டேட் தொழிலுக்காக மனைவி வாங்கிய ரூ.1 கோடி கடனை திருப்பி தராததால் அவரின் கணவரை மர்மகும்பல் காரில் கடத்தி சென்றது. இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், ராமச்சந்திரன், ரீகன் சக்கரவர்த்தி, வெங்கடேஷ்குமார், பாலாஜி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News November 26, 2025

திண்டுக்கல்: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 26, 2025

திண்டுக்கல்: சொந்த வீடு வேண்டுமா?

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!