News August 11, 2024
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு
முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு
வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும்
ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு
செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
Similar News
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி! APPLY NOW!

கள்ளக்குறிச்சி மக்களே,எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச.2-க்குள்<
News November 21, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-26 ஆண்டிற்கான பொதுகணக்கு குழு வரும் நவ.24-ஆம் தேதி, மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சட்டமன்ற பொதுகணக்கு குழுவினரிடம் மக்கள் கோரிக்கை மனுக்களும் அளிக்கலாம். என ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.21) அறிவித்துள்ளார்.
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: கடனை திருப்பி கேட்டவருக்கு கொலை மிரட்டல்

சவேரியார்பாளையத்தை சேர்ந்த சார்லஸிடம், நந்தன் கடனாக ரூ.3,51,300 வாங்கிவிட்டு அதில் ரூ.1,46,500 மட்டும் திரும்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்ட போது நந்தன் மற்றும் அவரது மனைவி ஜோஸ்பின் மேரி இருவரும் சார்லசை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் நேற்று (நவ.21) வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


