News March 20, 2024
அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தினி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் கடந்த 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியான மகிஷாசுரமர்த்தினி என்கிற எருமை கிடாவை பலி கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக செம்பூர் அம்மன் குதிரை வாகனத்தில் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவற்றை தொடர்ந்து பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News November 28, 2025
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

பெருந்துறை துடுப்பதி சாணார்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன் (28). எலக்ட்ரீசியன். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் காணப்பட்டார். தன்னுடன் பழகியவர்களிடம் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தமிழரசன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News November 28, 2025
ஈரோட்டில் கோடிக்கணக்கில் மோசடி: அதிரடி கைது

ஈரோடு சத்தி ரோடு பகுதியில், முகிம் கிளாஸ் ஹவுஸ் பெயரில் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வருபவர் முகிம் கான். இவரிடம் சூப்பர்வைசராக பணியாற்றிய ஆதில் கான், அவரது முதலாளி முகில் கான் வங்கிக் கணக்கை பராமரித்து வந்துள்ளார். தன்னுடைய வங்கிக்கு அவரது முதலாளியின் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை மோசடியாக மாற்றி தலைமறைவானார். இது தொடர்பான புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆதில் கானை கைது செய்தனர்.
News November 28, 2025
செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கோபி முன்னாள் எம்.எல்.ஏ செங்கோட்டையன் நேற்று தவெகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 28 பேர் கொண்ட உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படவுள்ளார். மேலும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


