News August 17, 2024
அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடக்கம்

ரூ.1,919 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சற்றுமுன் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 3 மாவட்டங்களில் 74 ஏரிகள், 971 குளம் குட்டைகள் என 1,045 நீர்நிலைகளை நிரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; 24,468 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
Similar News
News November 16, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
கோவை வரும் பிரதமர் மோடி!

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வரும் 19 – 21 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை கொடிசியா அரங்கில், இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். மேலும், சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு பிரதமர் விருது வழங்குகிறார். மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
News November 16, 2025
கோவையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

கோவையில் வரும் 29 தேதி அன்று, தமிழ்நாடு அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், 250 தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், வேலை தேடுபவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.


