News January 3, 2025

அதிவேகமாகச் சென்ற பேருந்து – விரட்டி பிடித்த போலீஸ்

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நல்ல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரளா மாநில பதிவு எண் கொண்ட சொகுசு பேருந்து ஒன்று வேளாங்கண்ணிக்கு வந்துவிட்டு நேற்றிரவு அதிவேகத்தில் திருத்துறைப்பூண்டி ஈசிஆர் சாலையில் சென்றது. அதனை கண்ட டிராபிக் போலீசார் பேருந்தை விரட்டிச் சென்று அதற்கு அபராதம் விதித்தனர்.

Similar News

News September 13, 2025

நாகை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையில் குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த வாடகையில், 4456 தனியார் அறுவடை எந்திரங்களின் விவரங்கள் உழவர் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உழவர் செயலி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News September 13, 2025

நாகை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தேவைக்கேற்ப செப்டம்பர் 15 முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை விற்பனை செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 13, 2025

நாகை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பார்வைக் கோர் பயணம் என்ற கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது. இதில், நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து சால்வை அணிவிக்கப்பட்டது.

error: Content is protected !!