News August 16, 2024
அதிராம்பட்டினம் அருகே 13 வயது மாணவன் பலி

அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படுத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் வீரசக்தி (13). 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நேற்று தனது உறவினரான சக்தி முருகன் (13) என்ற மற்றொரு சிறுவனுடன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
தஞ்சை: மழையா? இதை மறக்காதீங்க!

தஞ்சை மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE
News November 17, 2025
தஞ்சை: சாலை விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி

பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த பள்ளிகொண்டான் சேர்ந்த பாலாஜி இரு தினங்களுக்கு முன் பணி முடிந்து வீடு திரும்பும்போது, கரிக்காடு பயணியர் மாளிகை அருகே சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News November 17, 2025
தஞ்சை: பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய மூதாட்டி கைது!

வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரக பகுதியில் சிலர் விபசாரத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் சரோஜா (64) என்பவர் தனது வீட்டில் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் சரோஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


