News March 28, 2024
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உடன் முத்துநகர் கடற்கரை பகுதியில் நடை பயிற்சி செய்பவரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி: சிறுவன் பாலியல் வழக்கு.. சாகும் வரை ஆயுள்!

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனை கடந்த 2024-ம் ஆண்டு வேம்பாரை சேர்ந்த தாமஸ் அற்புத ரகசியம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தாமஸ் அற்புத ரகசியத்திற்கு இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
News November 22, 2025
தூத்துக்குடி: PF-ல் சந்தேகமா? முகாம் தேதி அறிவிப்பு

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் வருகிற 27ஆம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர், தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று பயனடையலாம் என ஆணையர் சிவ சண்முகம் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
தூத்துக்குடியில் மரணம் வரை ஆயுள் தண்டனை

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனை கடந்த 2024-ம் ஆண்டு வேம்பாரை சேர்ந்த தாமஸ் அற்புத ரகசியம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தாமஸ் அற்புத ரகசியத்திற்கு இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனை விரித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


