News March 27, 2024
அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

ஈரோடு அடுத்த காலிங்கராயன்பாளையம் பகுதியில், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ரூ.10,35,000 மதிப்புள்ள சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த சேலைகள், ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. எனவே பறக்கும் படையினர் அளித்த புகாரில் அதிமுக வேட்பாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 31, 2025
ஈரோடு: FREE சோழீஸ்வரர் கோவிலில் இலவச திருமணம்

ஈரோடு, வைரபாளையம், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT
News August 31, 2025
ஈரோடு: FREE தையல் மிஷின் வேண்டுமா ?

ஈரோடு மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <
News August 31, 2025
10-ஆம் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பா் 3- இல் பெறலாம்

ஈரோடு, கடந்த மாா்ச்-ஏப்10- ஆம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவகள் தனி தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த வாரம் தோ்வுத் துறைக்கு வந்தது. அவற்றை தோ்வுத் துறையினா் தீவிர சரிபாா்ப்பு பணியில் ஈடுபட்டனா்.ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 352 அரசு, அரசு நிதியுதவி, மெட்ரிக். பள்ளிகளைச் சோ்ந்த 24,160 மாணவ, மாணவிகள், 840 தனி தோ்வா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.