News March 20, 2024
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, கரூர் தொகுதியின் வேட்பாளராக தங்கவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 1, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வரும் ரேஷன் பொருட்கள்

கரூரில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நவம்பர் மாதம் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில், குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News November 1, 2025
கரூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 1, 2025
கரூர் சம்பவம்- அஜித் ஓபன் டாக்!

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் சமீபத்திய அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த தனிநபர் மட்டுமே இதற்கு காரணம் அல்ல. நாம் அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கும்இதில் ஒரு பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டிக் காட்டுவதில் நாம் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறோம். இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும் என்றார்.


