News March 28, 2024
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவருமான கணேசமூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அ.கணேசமூர்த்தியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
ஈரோடு: IMPORTANT கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வரும், 17ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. புதிதாக கல்லுாரிகளில் சேரும் மாணாக்கர்கள், ஏற்கனவே கல்லுாரியில் படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெற <
News September 14, 2025
ஈரோட்டில் ரூ.48 கோடியில் பணிகள்

ஈரோட்டில் மாநில நெடுஞ்சாலையாக இருந்த வெள்ளகோவில் ரோட்டை வெள்ளகோவில் – சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், தற்போது வெள்ளகோவில் – சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னியம்பாளையம் முதல் நொய்யல் ஆற்று பாலம் வரை ரூ.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
News September 14, 2025
பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் வட்டம், கொள்ளேகால் செல்லம்பாளையம் சாலையில் நால்ரோடு முதல் கர்கேகண்டி வரை சாலை புனரமைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், சாம்ராஜ்நகர், கூடுதல் துணை ஆணையாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதால், 15.09 முதல் 25.09 வரை 6 சக்கரங்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் பர்கூர் மலைப்பாதையில் சொல்லாமல் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லுமாறு ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.