News March 29, 2024
அதிமுக, பாஜக சுவர் விளம்பரம்..அதிருப்தி!

முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் மறைக்காகோரையாறு பாலம், உப்பூர் பஸ் ஸ்டாண்ட் கட்டிடம், ஆலங்காடு படித்துறை பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்களில் அதிமுக மற்றும் பாஜக சார்பில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் பெயரளவில் வெள்ளை சுண்ணாம்பு கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த விளம்பரம் அப்படியே தெரிகிறது. இதனால் மாற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு அதிருப்தியடைந்துள்ளனர்.
Similar News
News November 26, 2025
JUST IN திருவாரூர்: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
திருவாரூர்: புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா

நீடாமங்கலம் அருகில் உள்ள பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நேற்று மாலை (நவ. 25) நடைபெற்றது. காமதேனு சாரீட்டீஸ் மூலம் வகுப்பறையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு வர்ணப் பூச்சு அடிக்கப்பட்டு புதுப்பிக்க பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் தலைமை வகித்தார்
News November 26, 2025
திருவாரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருவாரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


