News March 29, 2025
அதிமுக நிர்வாகியை வெட்டிய வியாபாரி கைது

ஆத்தூர் நரசிங்கபுரம் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (52). இவர் அதிமுக முன்னாள் நரசிங்கபுரம் நகராட்சி தலைவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரி கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டு, நேற்று முன்தினம் கணேசன், ஸ்ரீராமை கத்தியால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராமை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இந்தநிலையில் நேற்று கணேசனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 3, 2025
மும்பை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்

மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-01005) வருகிற 9-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு சேலம் வந்தடையும். மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
News April 3, 2025
சேலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1,042 கோடி பயிர்க்கடன்!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1.10 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 1,042 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 1,007 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கை விட கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News April 3, 2025
சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடு

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். மேலும் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற ஏப்ரல் 17-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்துள்ளார்.