News March 26, 2025

அதிமுக நிர்வாகிகள் 6 பேர் ராஜினாமா கடிதம் 

image

திசையன்விளையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 6 கடைகளை பகிரங்க ஏலம் விடாமல் அதிமுக திசையன்விளை பேரூராட்சி செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான ஜெயக்குமார், திமுக நகர செயலாளர் சேர்ந்து ஏலம் எடுத்துக் கொண்டனர். இதனால் மக்களிடத்தில் பதில் சொல்ல முடியாமல் கிளைச் செயலாளர்கள் 6 பேர் நேற்று ராஜினாமா செய்து எடப்பாடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Similar News

News November 1, 2025

பாபநாசம் அணையில் இன்று தண்ணீர் திறப்பு

image

நெல்லை மாவட்டம் பாபநாசம் நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சுகுமார் தலைமையில் தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைக்க உள்ளார். இதைப்போல் 11.50 மணிக்கு மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

News November 1, 2025

நெல்லையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தாயுமாணவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கும் மேல் உள்ள ரேஷன் கார்டுதார்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் அவர்கள் இல்லம் தேடி வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற நவ. 3, 4ம் தேதிகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பன்னுங்க.

News November 1, 2025

போலி வங்கி கணக்கு மோசடி; இளைஞர் கைது – நெல்லை எஸ்.பி

image

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாநகரில் ஆன்லைனில் முதலீடு செய்து போலியான வங்கி கணக்குகள் மூலம் பணத்தை செலுத்த ஆசையை தூண்டி மோசடி செய்து ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம், கிட்டங்காயத்தை சேர்ந்த 27 வயதான ராசித் என்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது.

error: Content is protected !!