News March 20, 2024
அதிமுக சார்பில் சேலத்திற்கு புதிய வேட்பாளர்

2019 மக்களவை தேர்தலில், சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் என்பவர் 4,59,376 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதையடுத்து 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் புதிய வேட்பாளராக பி.விக்னேஷ் போட்டியிடுவதாக அதிமுக தலைமை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
சேலம் சினிமா தியேட்டரில் வாலிபர் பலி!

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டெல்பின் டோனி (24) என்பவர் நேற்று இரவு நண்பர்களுடன் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கிற்கு சினிமா பார்க்கச் சென்றார். படிக்கட்டில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்த அவரை நண்பர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை!
News October 19, 2025
ஆத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து!

ஈரோட்டைச் சேர்ந்த ஜெகன்செந்தில், பூமி அரசன், விவேக் ஆகிய மூவரும் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில், காரில் ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் சென்றபோது, திடீரென ஒரு நாய் குறுக்கே வந்தது. இதனால் ஓட்டுநர் பிரேக் போட்டபோது, கார் நிலை தடுமாறி கவிழ்ந்ததுடன், சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதியது. இதில்பலத்த காயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை
News October 19, 2025
சேலம்: டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள்<