News December 31, 2024
அதிமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்

கோவை மாநகராட்சியின் மன்ற கூட்டம் நேற்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிரபாகரனை இரு கூட்டங்களில் பங்கேற்க தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டது.
Similar News
News November 26, 2025
கோவையில் OPS -க்கு ஆயுர்வேத சிகிச்சை

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று ஓ.பன்னீர்செல்வம் கோவை வந்தார். அப்போது, பேசிய ஓபிஎஸ் பேச வேண்டியதை எல்லாம் நேற்றே பேசிவிட்டேன். கோவையில் 6 நாள் தங்கி சிகிச்சைப்பெற உள்ளேன் என்றார். பின், அவர் கணபதிக்கு சென்று அங்குள்ள இயற்கை நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அவர் அங்கு 6 நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார்.
News November 26, 2025
கோவை வரும் துணை முதல்வர்

தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (26-11-2025) பிற்பகல் 02:30 மணிக்கு, கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, கோவை விமான நிலையம் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு, அவருக்கு கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே இதில் பங்கேற்க திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
கவுண்டம்பாளையத்தில் இளைஞர் தற்கொலை

கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கோகுல் (19). இவர் உறவுக்கார பெண்ணை காதலித்து வந்த அவர், அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிந்து மனவேதனை அடைந்தார். பின் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


