News June 27, 2024
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரதம்

தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டும் இபிஎஸ் தலைமையில் இன்று எழும்பூர் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்றும், வாகனங்களை கொண்டுவரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
அக்டோபர் மாதத்தில் 93.27 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்

2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 93,27,746 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக அக்டோபர் 17ம் தேதி மட்டும் 4,02,010 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்கி வரும் மெட்ரோ நிறுவனத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 1, 2025
சென்னை மெரினாவில் நாளை கலைவிழா

சென்னை நாளை மெரினாவில் கலைவிழா நாளை (நவ.2 ) நடைபெறவுள்ளது. இதில், நெடுக்குச்சியாட்டம், மான் கொம்பு ஆட்டம், ஒயிலாட்டம், வீரமும், இசையும், திறமைகளும் சங்கமிக்கும் மேடையாக இந்த விழா அமையவுள்ளது. நேரம்: மாலை 5:30 மணிக்கு இடம்: நீலக் கொடி பகுதி, மெரினா கடற்கரை. பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து கண்டுகளிக்குமாறு மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த WEEK ENDக்கு இங்கு போய் VIBE பண்ணுங்க.
News November 1, 2025
சென்னையில் வீடு தேடி வரும் ரேசன் பொருள்

கூட்டுறவு சங்ககளின் கூடுதல் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற நவ 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, சென்னையில் 15 மண்டலங்களில் வீடு வீடாக பொருள்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


