News February 15, 2025
அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான வழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூராக பேசியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணைக்கு சி.வி சண்முகம் ஆஜராகவில்லை. அவர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர். இதையடுத்து, வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News November 28, 2025
விழுப்புரம்: நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
News November 28, 2025
விழுப்புரம்:ஏரியில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் பழைய காலனியில் முதியவர் வீரமுத்து வாழ்ந்து வந்தார். இவர் நேற்று மாலை ஏரிப்பகுதியில் இயற்கை உபாதையை கழித்துவிட்டு ஏரி தண்ணீரில் கால் கழுவ சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 28, 2025
விழுப்புரம்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<


