News August 9, 2024
அதிமுகவுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை மாநகராட்சிக்கு எதிராக வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போரட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து வடசென்னை அதிமுக நிர்வாகி கணேசன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணக்குள் 30 நிமிடங்களுக்கு மட்டும் போராட்டம் நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது.
Similar News
News February 11, 2026
மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டியில் இன்று காலை புதிய தனியார் மருத்துவமனை திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ள என்பதை குறித்து பார்வையிட்டார். மேலும் சிறப்பம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
News February 11, 2026
குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு: போலீசார் விசாரணை

சென்னை வியார்பாடியை சேர்ந்தவர் நந்தினி (34). இவர் குடும்பதகராறு காரணமாக நேற்று (பிப்.10) உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 11, 2026
சென்னை: பைக், காருக்கு fine-ஆ? Cancel செய்வது ஈஸி!

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


