News August 9, 2024
அதிமுகவுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை மாநகராட்சிக்கு எதிராக வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போரட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து வடசென்னை அதிமுக நிர்வாகி கணேசன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணக்குள் 30 நிமிடங்களுக்கு மட்டும் போராட்டம் நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது.
Similar News
News November 23, 2025
சென்னை: உடல் நசுங்கி கொடூர பலி!

சென்னை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் அப்துல் வாஹித் (38). நேற்று(நவ.22) இவர் ஆட்டோவில் பள்ளி மாணவி ஒருவரை சவாரியாக ஏற்றிக் கொண்டு கீழ்ப்பாக்கம் – மேடவாக்கம் டேங்க் சாலையில் சென்று கொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வளாகத்தின் உள்ளே பனைமரம் தானாக ஆட்டோவின் முன்பகுதி மேல் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
News November 23, 2025
வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புவனா என்ற 20 வயது பெண் சிங்கம் உடல்நலக்குறைவு, வயதுமூப்பு காரணமாக பல உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தது. பூங்காவில் மொத்தம் 7 சிங்கங்கள் பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சிங்கம் உயிரிழந்துள்ளது.