News April 8, 2025
அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை

மணவெளி தொகுதியில், பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மணவெளி சட்டமன்ற தொகுதியில் ரூ.51.56 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடர்பாக அதிகாரிகள் எடுத்துக் கூறினர். அதற்கான பணிகளை விரைந்து முடிக்க சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார்.
Similar News
News November 11, 2025
புதுவை: கண்களை தானமாக வழங்கிய குடும்பம்

புதுவை, வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (98). இவர், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது கண்களை தானம் செய்திட, அவரது குடும்பத்தினர் முன்வந்து, அது குறித்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளை சேர்மனை தொடர்பு கொண்டுள்ளனர். அவர், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அங்கு வந்த கண் மருத்துவ குழுவினர் ஜெயலட்சுமி கண்களை தானமாக பெற்றுச் சென்றனர்.
News November 11, 2025
புதுவை: மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்!

புதுச்சேரி, உப்பளம் சோனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மா, இவரது மனைவி தமிழ்செல்வி, தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடற்கரை காந்தி சிலை அருகில் பொம்மை கடை நடத்தி வரும் தமிழ் செல்வியை, குடிபோதையில் வந்த தர்மா, கடையில் இருந்த மனைவி தமிழ் செல்வியை ஆபாசமாக பேசி, உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த புகாரின் படி, பெரிய கடை போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.
News November 11, 2025
புதுச்சேரி: அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

புதுச்சேரி மாநிலம் தவளைக்குப்பத்தை அடுத்து உள்ள TN பாளையம் மலட்டாற்றில் 50 வயதுடைய அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தவளகுப்பம் போலீசார் அந்த உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


