News March 28, 2025
அதிகாரிகளுக்கு 2 வாரம் கெடு கொடுத்த கலெக்டர்!

பெரம்பலூர் மாவட்ட சட்ட-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், “கோர்ட்டு உத்தரவின்படி பொது இடங்களில் அனுமதியில்லாமல், நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 2 வாரத்திற்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த்துறை அலுவலர்கள் போலீசாருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 14, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், மகாளமேடு பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்று புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கோழி வளர்த்து வரும் பயனாளகளின் வீடுகளுக்கு நேற்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த ஆய்வின் பொது மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சசிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
News December 14, 2025
பெரம்பலூரில் வாகனங்கள் பொது ஏலம்!

பெரம்பலூர் மாவட்டத்தில், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 நான்கு சக்கர, 1 மூன்று சக்கர மற்றும் 12 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில், ஏலம் விடப்பட்டது. மேலும் இந்த பொது ஏலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஏலம் கேட்டனர்.
News December 14, 2025
பெரம்பலூர்: தேசிய நீதிமன்றத்தில் 563 வழக்குகள் தீர்வு

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் சார்பில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பத்மநாபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் இதில் மொத்தம் 563 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


