News April 9, 2025
அதிகளவு புரோட்டீன் பவுடர் சாப்பிட கூடாது

வேகமாக உடற்கட்டழகை கொண்டு வருவதற்காக, அதிகளவு புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்ட இளைஞர் சென்னையில் உயிரிழந்தார். அதிகளவு புரோட்டீன் பவுடரால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களைத் தூண்டும். பால் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கு இரைப்பை மற்றும் குடல் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும். உணவு மூலமா புரதத்தை எடுத்துக்கொள்வது நல்லது.
Similar News
News January 9, 2026
சென்னை: போகி பண்டிகை மாநகராட்சி அறிவுறுத்தல்!

சென்னையில் போகி பண்டிகையன்று காற்று மாசு ஏற்படுவதைத் தவிர்க்க, பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வரும் ஜனவரி 14-ம் தேதி 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று தரம் கண்காணிக்கப்படும் என்றும், விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 9, 2026
சென்னையில் வீணான ‘ஜனநாயகன்’ கொண்டாட்டம்

சென்னை ரோஹிணி திரையரங்கம் முன்பாக இன்று (ஜன.09) விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகும் என அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமான பேனர்களை வைத்திருந்தனர். ஆனால், சென்சார் சான்றிதழ் வழங்காததால் இன்று திரைப்படம் வெளியாகவில்லை. இதனால், திரையரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்தும் வீணானதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
News January 9, 2026
சென்னையில் பயங்கரம்; உடலை எரித்து வெறியாட்டம்

அரும்பாக்கம் விநாயகபுரத்தில் வசிப்பவர் சீனிவாசன் (50). இவர் 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, வீட்டில் அமுதாவை கத்தியால் குத்தி படுகொலை செய்து தீ வைத்து எரித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொடூரத்தை அரங்கேற்றியது டீ கடையில் வேலை பார்க்கும் சாந்தகுமார் (28) என்பது தெரியவந்தது.


