News September 15, 2024
அண்ணா வெறும் பெயரல்ல – கனிமொழி எம்.பி. பெருமிதம்

“‘அண்ணா’ வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல்” பண்பாட்டின் குறியீடு. உரிமை போரின் முன்னோடி. தமிழ்நாட்டின் அடையாளம். திராவிட மாடலின் தொடக்கம். சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமையும் கொள்கையாகக் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவிற்கு தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
தூத்துக்குடி: ரூ.50,000 வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகை முழுவதும் செலுத்திய பின்னும் 3 மாதம் கூடுதலாக தவணைத் தொகை பிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக முத்துக்குமார் தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனு அளித்தார். இதில் நிதி நிறுவனம் முத்துக்குமாருக்கு ரூ.50000 வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
News November 9, 2025
தூத்துக்குடி: அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து உவரி செல்லும் 143 சி அரசு பேருந்து சென்றது. இப்பேருந்து காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி அருகில் வந்த போது, மர்ம நபர்கள் பின்புறம் கல் எரிந்து கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 9, 2025
தூத்துக்குடி மாநகராட்சி கடும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் நாள்தோறும் 180 டன் குப்பைகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது. எனவே இவ்வாறு மழைநீர் வடிகாலிகளில் குப்பை கொட்டும் பொது மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.


