News August 25, 2024
அண்ணா பல்கலைக்கழக கட்டணம் உயர்வு?

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இளநிலை, முதுகலை பொறியியல் பட்ட படிப்பிற்கு சான்றிதழ் பெறுவதற்கு ரூ.1000 லி ரு.1500 ஆக அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு கட்டணம் ரூ. 1500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண் பட்டியலை டிஜி லாக்கரில் பதிவு செய்ய 1500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்
Similar News
News November 19, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
சென்னையில் இரண்டு நாள் அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் அகர்பத்தி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி ஈக்காட்டுத்தாங்கல் EDII-TN வளாகத்தில் வரும் 25,26 தேதிகளில் காலை 10 முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், முன்பதிவு கட்டாயம். www.editn.in அல்லது 9360221280/9840114680 விண்ணப்பிக்கலாம்.
News November 18, 2025
விக்டோரியா ஹால் நவ-20 ஆம் தேதி திறப்பு!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32 கோடியே 62 லட்சம் செலவில் விக்டோரியா பப்ளிக் ஹால் சீரமைக்கும் பணிகள் தொடங்கின. தற்போது இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. தரைத்தளத்தில் 600 பேரும், இடைத்தளத்தில் 600 பேரும், பால்கனியில் 200 பேரும் என மொத்தம் 1400 பேர் அமரும் வகையில் இடவசதி கொண்ட விக்டோரியா பப்ளிக் ஹாலை வரும் 20-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.


