News April 14, 2024
அண்ணாமலையார் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

தி.மலையில் கிரிவல பாதையில் திருநேர் அண்ணாமலையார் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 1 ஆம் தேதியன்று காலையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி இன்று காலை லிங்கத்தின் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. அதனை காண அதிகாலையில் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
Similar News
News December 3, 2025
மகாதீபம்: தி.மலையில் கனமழை பெய்யும்

திருவண்ணாமலையில் இன்று (டிச.03) காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் இன்று நண்பகல் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளதால் கோயிலுக்கு, செல்லும் போது மக்கள் தங்களின் பாதுகாப்பிற்காக குடை அல்லது ரெயின் கோர்ட்டை எடுத்துச் செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க
News December 2, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (டிச.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
தீப திருவிழாவை ஒட்டி 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தி.மலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 24 தற்காலிக பேருந்து நிலையங்கள், 130 கார் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.220 இலவச பேருந்துகள் 108 ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுக்கள், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


