News January 1, 2025
அணையில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

திண்டுக்கல் A.வெள்ளோடு, கோம்பை அருகே ஆணை விழுந்தான் அணையில் இன்று நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், சிறுவனின் உடலை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் உடலை மீட்கும் பணி நாளை காலை மீண்டும் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 20, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், (நவம்பர் 20) இன்று “கடன் செயலி (Loan App) மூலம் கடன் பெறுவதை தவிர்ப்போம்” எனும் வாசகத்துடன் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டது. சமூக வலைதளங்கள் வாயிலாக தினமும் அவசரத் தேவைகளில் விழிப்புணர்வை காவல் துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
News November 20, 2025
திண்டுக்கல்: இலவச பயிற்சியுடன் AIRPORT-ல் வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <
News November 20, 2025
திண்டுக்கல்லில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்தில் நாளை 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு ,12 ஆம் வகுப்பு, பட்டபடிப்பு, டிப்ளொமோ மற்றும் ஐ.டி.ஐ படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.


