News August 14, 2024
அணைக்கட்டு விவசாயிகள் நிலத்தில் ஒப்பாரி வைத்து போராட்டம்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கட்டு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்நிலையில் முதியோர் உதவித்தொகை பெறும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடையாது என அதிகாரிகள் கூறியதால், நிலத்தில் இறங்கி நெற் பயிர்களை கட்டி அணைத்து ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News November 2, 2025
வேலூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
வேலூரில்: ரூ.4.77 லட்சத்திற்கு ஏலம்

வேலூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களில் விதிமீறல் வழக்குகளில் பறிமுதல் செய்த 16 மோட்டார் சைக்கிள் நேற்று அக்.31 ஏலத்தில் விற்கப்பட்டது. இந்த ஏலம் ரூ.4,77,904 வரையில் உயர்ந்தது. ஏல நிகழ்வில் மதுவிலக்கு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர். சட்டவிரோத மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் நீதிமன்ற உத்தரவு பிறகு ஏலத்திற்கு விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
News November 1, 2025
வேலூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


