News February 18, 2025

அணைக்கட்டு அருகே 100 லிட்டர் கள்ளச்சாரயம் ஊரல் அழிப்பு

image

வேலூர் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை சுற்றியுள்ள மலைப்பகுதியில் நேற்று (பிப்.,17) சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பேரலில் 100 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அங்கேயே ஊற்றிய அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 16, 2025

வேலூர்: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

வேலூர் மக்களே! மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200 மற்றும் TOLL FREE NO-1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News September 16, 2025

வேலூர்: கேன் தண்ணீர் குடிக்கிறீர்களா?

image

வேலூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.
✅ குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS & FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
✅ ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
✅ கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆலோசனை!

image

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று (செப்.,16) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர்கள், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!