News November 25, 2024
அணைகளில் இருந்து வெளியேறும் நீரின் அளவு

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணைகளான 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர், 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர், 52 அடி முழு கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் இருந்து வினாடிக்கு இரண்டு கன அடி தண்ணீர் வெளியேறுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று(நவ.25) தெரிவித்துள்ளது.
Similar News
News November 28, 2025
நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

டிட்வா புயல் காரணமாக மாணவர்களின் நலன்கருதி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
News November 28, 2025
மழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வின் தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 24ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வானது வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
News November 28, 2025
JUST IN நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை

நெல்லை, பாப்பாக்குடி அருகே கலிதீர்த்தான்பட்டியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் (29) தனது வயலில் உள்ள பம்பு செட் அறையில் தூங்கியபோது, மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தனர். அதிகாலையில் தாயார் சென்று பார்த்தபோது முகம் சிதைந்த நிலையில் உடல் கிடந்தது. பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


