News November 19, 2025

அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சை: நடிகை மான்யா ஆனந்த் முற்றுப்புள்ளி

image

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக் கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு <<18320110>>அட்ஜஸ்மென்ட்<<>> பற்றி பேசியதாகவும், அவர் போலியாக இருக்கலாம் என்று தான் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இதனால், 2 நாள்களாக கோலிவுட் சினிமாவில் சுற்றி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, <<18324641>>நடிகர் தனுஷ்<<>> தரப்பும் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 5, 2026

அறிவிப்புதான் வருது.. ஆள காணோம்.. என்னாச்சு?

image

வேட்பாளர்கள் அறிவிப்பதும், மாற்றுவதுமாக ராமதாஸ் – அஇபுதமமுக கூட்டணி உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்கு 18 நாள்களே உள்ள நிலையில், ராமதாஸ், சசிகலா, அவர்களின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவோ, பரப்புரை மேற்கொண்டதாகவோ தகவல் இல்லை என்கின்றனர். வட & தென்பகுதிகளில் வாக்குப் பிரிப்பில் இக்கூட்டணி பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி இருப்பது பேசுபொருளாகியுள்ளது.

News April 5, 2026

தேமுதிகவா? திமுகவா? பிரேமலதா பதிவால் பரபரப்பு

image

போளூர் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் T.P.சரவணனை, பிரேமலதா தனது X பக்கத்தில் ‘திமுக வேட்பாளர்’ குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, தான் போட்டியிடவிருந்த காட்டுமன்னார்கோவிலில் காங்கிரஸை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்து <<19568780>>திருமா <<>>அதிர்ச்சி கொடுத்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், பிரேமலதாவின் இந்த பதிவு, ஒரு தொகுதியை திமுகவுக்கு தேமுதிக விட்டுக் கொடுத்துவிட்டதா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News April 5, 2026

நாயும் பிழைக்கும்.. EPS-க்கு ஆ.ராசா பதிலடி

image

கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை ஆ.ராசா விமர்சித்ததாக வெளியான ஆடியோவை சுட்டிக்காட்டி EPS சாடியிருந்தார். இந்நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு பேசுவது அயோக்கியத்தனமானது என்று ஆ.ராசா பதிலளித்துள்ளார். EPS-ஐ மண்டியிட்டு பதவி பெற்றவர் என்றும், அரசியலுக்கு அருகதையற்றவர் எனவும் கடுமையாக விமர்சித்த அவர், ‘ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என காட்டமாக X-ல் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!