News April 30, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க போறிங்களா?

image

அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 7, 2025

தருமபுரி: HOTEL-ல தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!

News December 7, 2025

தருமபுரி: பைக்கில் வந்து ஆடு திருடிய 3 பேருக்கு வலை!

image

அரூர் அடுத்த மேலானூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் அருகே நாய் குரைத்துள்ளது. இதனால் தர்மலிங்கத்தின் மனைவி பாரதி வெளியே வந்து பார்த்தபோது 3 பேர் மாட்டு கொட்டகையில் இருந்த 3 ஆடுகளை திருடிக்கொண்டு டூவீலரில் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது, அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து அரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2025

தருமபுரியில் முதல் முறையாக செஸ் போட்டி!

image

தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக, நேற்று (டிச.06) விவேகானந்த செஸ் அகாடமி சார்பில் சர்வதேச அளவிலான செஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பின், பல்வேறு நாடுகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 18மாநிலங்களில் இருந்து மொத்தம் 412 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

error: Content is protected !!