News April 30, 2025
அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே திருச்சி மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 25, 2025
திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு!

திருச்சி மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News November 25, 2025
திருச்சியில் கோர விபத்து

திருச்சி வரகனேரியை சேர்ந்த ஷேக் அப்துல்லா, நிகேஷ் ஆகியோர் டூவீலரில் நேற்று தென்னூர் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் டூவீலரில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஷேக் அப்துல்லா பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காட்டூரைச் சேர்ந்த முகமது ஆசிக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News November 25, 2025
திருச்சி: சுற்றுலா பயணிகளுக்கு தடை!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த சுற்றுலா தலமான புளியஞ்சோலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆற்றில் இறங்கி குளிப்பது, நீர்நிலைக்கு அருகில் செல்பி எடுப்பது, ஆற்றங்கரைக்கு அருகே செல்வது, வனப் பகுதிகளில் நடமாடுவது போன்ற செயல்களுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.


