News April 12, 2025
அடையாள அட்டைப் பெறாவிட்டால் பிரதமர் கவுரவ நிதி நிறுத்தப்படும்

குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இனிவரும் காலங்களில் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெற தனித்துவமான அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 782 கிஷான் பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 22 ஆயிரம் பேர் அடையாள அட்டை பெறவில்லை. பதிவு செய்யாத இந்த விவசாயிகளுக்கு அடுத்த தவணை உதவித்தொகை நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
Similar News
News September 16, 2025
நகை, பணம் பெற்றவர் ஏமாற்றியதால் தற்கொலை

குலசேகரத்தை சேர்ந்த ரமணியின் கணவர் அஜிகுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரமணி அரசுப் பணி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த போது, அங்கு ஆர்.ஐ. யாக வேலை பார்த்த வெள்ளிசந்தை வேல்முருகன் அவரை திருமணம் செய்வதாக கூறி நகை, பணம் பெற்று விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 15, 2025
குமரியில் 10 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

திக்கணங்கோடு சந்திப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் 79 வழியோர கடலோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் அந்த குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம்,முட்டம், மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 15, 2025
குமரி: குழந்தையை கொன்ற தாய்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள சம்பக்குளத்தில் கடந்த 11-ம் தேதி பச்சிளம் குழந்தை சடலமாக தலை இல்லாமல் மிதந்து வந்த வழக்கில், பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயான ஈத்தாமொழி புதூர் பகுதியை சேர்ந்த ரேகா (38) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். வாலிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் பிறந்ததால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது.