News October 24, 2024
அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

கோவை ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக நாளை கோவை, சி.எம்.சி.காலனி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வெரைட்டிஹால் ரோடு திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது
Similar News
News September 16, 2025
கோவை: தேர்வில்லாமல் அரசு வேலை!

கோவை மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <
News September 16, 2025
கோவை செங்குளத்தில் மூழ்கி பலி

கோவை குனியமுத்தூர் செங்குளத்தில் நேற்று முன்தினம் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 16, 2025
கோவை: போதையால் நேர்ந்த விபரீதம்!

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் ஹரி பிரகாஷ்(26). பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது தாயாரிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு எரிமேடு தண்டு மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, அவர் அங்கு நிலைதடுமாறி அங்கிருந்த சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.