News February 20, 2025
அஞ்சல் துறையில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
Similar News
News February 22, 2025
காஞ்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

காஞ்சி மாநகராட்சிக்குட்பட்ட நத்தப்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று (22.02.2025) காலை 8 மணிக்கு நெகிழி கழிவு சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். துணை ஆட்சியர் ஆஷிப் அலி, மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் குப்பை நெகிழி சுத்தப்படுத்தினர்.
News February 22, 2025
தீவிரமாகும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

பணி நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆலை வளாகத்திலேயே கடந்த 16 நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
News February 21, 2025
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் விலகல்

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராயப்பன் இன்று (பிப்.,21) நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அறிக்கையில், கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாகவும், இதுவரை உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.