News March 3, 2025

அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 48 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <>லிங்கை<<>> கிளிக் செய்து உடனே விண்ணப்பியுங்கள். உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க.

Similar News

News October 29, 2025

ராமநாதபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நாளை (30.10.2025) ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

News October 29, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக். 28) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News October 28, 2025

ராம்நாடு: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக். 28) முதல் அக். 30 மூன்று நாட்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாகவும் மாவட்ட முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!