News March 3, 2025
அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. மதுரை மாவட்டத்திற்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். இந்த லிங்கை <
Similar News
News November 23, 2025
மதுரையில் எச்சரிக்கை.. மஞ்சள் அலர்ட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை வருகிறது. இந்நிலையில் விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், நாளை (நவ 24) விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
News November 23, 2025
மதுரையில் லைன்மேன் உதவி வேண்டுமா..!

மதுரை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 23, 2025
மதுரை: 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

மதுரை முடக்கத்தான் கோவிந்தராஜ் 40 எலக்ட்ரீசியன் இவருக்கும் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார், மனவேதனை அடைந்த கோபிராஜ் தனது 10 வயது 5 வயது மகள்களை கழுத்தை நெரித்து கொலை செய்தார், பின்னர் கோபிராஜ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இரவு 8:30 மணிக்கு கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


