News March 3, 2025

அஞ்சல் அலுவலகத்தில் காகிதமில்லா பரிவர்த்தனை

image

அஞ்சல்துறை வாடிக்கையாளர் வசதிக்கு, காகிதமில்லா ஆதார் அடிப்படையிலான இ-கே.ஒய்.சி எனும் அங்கீகார செயல்முறை பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கணக்கில் உள்ள வாடிக்கையாளரின் கே.ஒய்.சி. விபரங்களை மேம்படுத்திக் கொள்ளுதல், நிதி பரிவர்த்தனை என முக்கிய பரிவர்த்தனைகளை ஆதார் அடிப்படையில் கைரேகை மட்டும் வைத்து அஞ்சல்நிலையங்களில் மேற்கொள்ளலாம் என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர்

Similar News

News November 5, 2025

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மக்களின் சமூக வலைதள பாதுகாப்பை உறுதிசெய்ய, தங்கள் முகநூல் (Facebook) கணக்கில் Profile Lock செய்வது அவசியம் என சேலம் காவல்துறை தெரிவித்துள்ளது. இது மூலம் அறிமுகமில்லாத நபர்கள் உங்கள் புகைப்படம், தகவல் போன்றவற்றைப் பெற முடியாது. தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க அனைவரும் உடனே ‘Lock’ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 4, 2025

சேலம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

image

சேலம் மாநகர காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது. “Teach your children – Good Touch & Bad Touch” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட போஸ்டர் மூலம் பெற்றோர்களை தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் குறித்து அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 4, 2025

சேலம்: தீபாவளி சீட்டு.. பீர் பாட்டிலால் தாக்குதல்!

image

சேலம் பெருமாம்பட்டியை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவருக்கும் தீபாவளி சீட்டு நடத்தியது தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் பழனிசாமியும் அவரது நண்பர் பொட்டு கண்ணன் என்பவரும், செந்திலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரும்பாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!