News March 29, 2024
அசோக் நகரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபமாகவே பள்ளி மற்றும் கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
Similar News
News July 5, 2025
பல் துலக்கும்போது தண்ணீரைச் சேமிக்க அறிவுறுத்தல்

சென்னை குடிநீர் வாரியம் பல் துலக்கும்போது தண்ணீரைச் சேமிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஓடும் குழாய்க்குப் பதிலாக குவளையைப் பயன்படுத்தினால் ஒருமுறைக்கு 4.25 லிட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம். ஓடும் குழாய் 5 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் நிலையில், குவளை வெறும் 0.75 லிட்டர் மட்டுமே பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணி தீவிரம்

சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்புப் பணிகளைத் தமிழக அரசு ரூ.338 கோடி மதிப்பில் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஆலந்தூர் வட்டம் மற்றும் சின்னம் பகுதிகளில் ரூ.9.4 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் மற்றும் உள்வாங்கி நீரோட்டச் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் வெள்ள சேதங்களைக் கட்டுப்படுத்த உதவும்.
News July 5, 2025
திருமணம் வரம் தரும் திரிசூலம் திரிபுரசுந்தரி

சென்னை திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது திரிசூலநாதர் திருக்கோயில். இது ஒரு பழமையான சிவன் கோயிலாகும். நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளதால், இந்த மலைகள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. இங்குள்ள அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு புடவை சார்த்தி, வளையல் அணிவித்து, சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க