News March 29, 2024
அசோக் நகரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபமாகவே பள்ளி மற்றும் கோயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
Similar News
News April 21, 2025
சென்னையில் வாட்டி வதைக்கும் வெயில்

சென்னையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <
News April 21, 2025
மாணவிக்கு கருக்கலைப்பு: பேராசிரியர் கைது

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். இவருக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கருக்கலைப்பின்போது மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.