News June 27, 2024

அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை மூட உத்தரவு

image

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்தினால் நாள் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News December 9, 2025

காரைக்காலில் கார்னிவல் விழா குறித்து ஆலோசனை

image

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கார்னிவல்- 2026 நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன், ஆட்சியர் ரவி பிரகாஷ் கலந்து கொண்டனர். மேலும் கார்னிவல் விழா ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மற்றும் மலர் கண்காட்சி ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

News December 9, 2025

புதுவை: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

News December 9, 2025

புதுச்சேரி வரும் ரயில்கள் ரத்து

image

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மண்டல அதிகாரி வினோத் குமாா் நேற்று வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி – புதுச்சேரி பயணிகள் ரயில் திருப்பதியில் அதிகாலை தினமும் 4 மணிக்குப் புறப்படுகிறது. டிச.15-ஆம் தேதி இந்த ரயில் திருப்பதி – விழுப்புரம் இடையே மட்டும் இயக்கப்படும். புதுச்சேரி – எழும்பூா் பயணிகள் ரயில், டிசம்பர் 15ல் புதுச்சேரி விழுப்புரத்துக்கு இடையில் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.

error: Content is protected !!