News April 23, 2025
அங்கன்வாடி வேலை: இன்றே கடைசி நாள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 164 அங்கன்வாடி பணியாளர், 3 குறுஅங்கன்வாடி பணியாளர், 155 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்படுகிறது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். இன்றைக்குள்(ஏப்.23) <
Similar News
News December 8, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் வேண்டுகோள்

நாட்டைக் காக்கும் படைவீரர் நலனுக்காக கொடி நாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வேண்டுகோள் விடுத்தார். படைவீரர் கொடிநாள் 2025 நிதி சேகரிப்பை உண்டியல் மூலம் நிதி செலுத்தி தொடங்கி வைத்தார். வீரமரணம் எய்தியவர்களின் குடும்பம், ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 615 பேருக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான பொன்னாடை, திருமண நிதி, கல்வி உதவி உள்ளிட்ட நலனுதவிகள் வழங்கப்பட்டன.
News December 8, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின் தடை

ஆற்காடு கோட்டத்தைச் சேர்ந்த திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி மற்றும் சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களைச் சேர்ந்த பகுதிகளான சாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளமபாடி, கீராம்பாடி, மாங்காடு, லாடாவரம். மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், பின்னந்தாங்கல் ஆகிய பகுதிகளில் நாளை(டிச.9) காலை 9 – மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..


