News August 6, 2024

அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

image

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், வடக்கு அரியாவூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, குழந்தைகளின் வளர்ச்சி எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டார்.

Similar News

News October 14, 2025

திருச்சி: புதிய ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பதவி ஏற்பு

image

திருச்சி தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளராக விபின்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நாட்டின் பல்வேறு ரயில்வே மண்டலங்கள் மற்றும் உள்கட்டமைப்பு களங்களில் 1988ம் ஆண்டு முதல் சிறப்பாக பணியாற்றி வந்த விபின்குமார், சிறப்பான நிர்வாகத்தை மேற்கொள்வார் என தெற்கு ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் பட்டியல் இன மக்களுக்கான சலுகைகளை பெறுவதற்காக, போலியான ஆவணங்களை தயாரித்து, அதை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டதாக அவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்த விசாரணை இன்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் ஜெயந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

News October 13, 2025

திருச்சி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தடுக்கலாம். SHARE !!

error: Content is protected !!