News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

கிருஷ்ணகிரியில் 102 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 – 35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News November 23, 2025

ஓசூர்: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்

image

ஓசூர் அடுத்த சூளகிரி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சீதாராமன் (34), நிலம் வாங்க வேண்டும் என பெண் ஒருவர் அழைத்ததால் பத்தலப்பள்ளி சென்றார். அங்கு ஏழு பேர் கும்பல் கடத்தி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். பின், சீதாராமன் நண்பருக்கு லொகேஷன் அனுப்பியதால், போலீசார் சூடசந்திரம் பகுதியில் ரோந்து வைத்து நான்கு பேரை கைது செய்து சீதாராமனை பத்திரமாக மீட்டனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

News November 22, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் வெளியீடு!

image

கிருஷ்ணகிரி, இரவு ரோந்து செலும் காவலர்கள் 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 22, 2025

இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

image

கிருஷ்ணகிரி, கட்டையான பல நூலக மைதானத்தில் நாளை (நவ.23) இயற்கை விவசாயிகள் நடத்தும் 194வது மரபுச் சந்தை நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், தானியங்கள், பசு நெய், தேன், அவல், ஊறுகாய், சிறு தானியங்களால் செய்த கேக், மருந்தில்லாமல் விளையும் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!