News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 197 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், <>www.icds.tn.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர், அதே கிராமம்/ஊராட்சி/வார்டு பகுதியில் வசிக்கும் நபராக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News November 28, 2025

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

காஞ்சி: உத்திரமேரூர் ஒன்றியம் மானாமதி கண்டிகையைச் சேர்ந்தவர் தாமஸ்(81). இவர் கீரை வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து, வந்தவாசி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 28, 2025

காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.

error: Content is protected !!