News April 6, 2025
அங்கன்வாடி பணியாளர்: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 17 அங்கன்வாடி பணியாளர், 17 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 262 அங்கவாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. எனவே இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்… SHARE NOW!
Similar News
News November 24, 2025
காலி பாட்டிலுக்கு ரூ.10: திருச்சியில் புதிய திட்டம் அமல்

திருச்சி மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் வரும் நவ.25-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். இதற்கு டாஸ்மாக் மது பாட்டில்ககளை வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டு, காலி மதுபாட்டில்களை மீண்டும் அதே மதுபானக் கடையில் ஒப்படைத்தால், வாடிக்கையாளருக்கு ரூ.10 மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
திருச்சி: மின் நிறுத்தம் வாபஸ் – கனமழை எதிரொலி

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, தியாகேசர் ஆலை, விடத்திலாம்பட்டி, பன்னாங்கொம்பு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட 81 கிராமங்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மழைகாரணமாக இன்று மின் நிறுத்தம் செய்யப்படாது என மறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News November 24, 2025
BREAKING: திருச்சி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


