News April 8, 2025
அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)
Similar News
News November 11, 2025
மேட்டுப்பாளையம் மக்களே! ஜாக்கிரதை

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் அழைத்த மர்மகும்பல் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும், அதற்காக ஜிபே என்னை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதில் பலர் தப்பிய நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கியுள்ளார். அதிலும் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாததால் தப்பினார். எனவே, மோசடி அழைப்புகளை நம்ப வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
News November 11, 2025
கோவை: தூக்கிட்டு தற்கொலை

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர் கடந்த சில நாட்களாகவே வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
குண்டு வெடிப்பு: கோவையில் அலர்ட்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் எதிரொலியாக கோவை ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப், வெடிகுண்டு தடுப்பு பரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சோதனை (ம) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


