News April 1, 2025
அங்கன்வாடி பணிக்கு ரெடியா?

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <
Similar News
News April 5, 2025
சுய உதவி குழுக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மகளிர் சுய உதவி குழுக்களில் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் (அ) சந்தைப்படுத்தல் உருவாக்கும் வகையில் மண்டல பொது வசதி மையம் துவங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற தகுந்த ஆவணங்களுடன் வரும் 8ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 5, 2025
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை

தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 10ஆம் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கு பெறுமாறு தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
News April 5, 2025
தஞ்சை: வயலில் கிடந்த பச்சிளம் குழந்தை

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை கிராமத்தில் நேற்று வயலில் பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் கிடந்துள்ளது. பிலோமினாள் என்ற பெண், குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்துள்ளார். உடனடியாக அவர் தனது கணவருடன் குழந்தையை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.