News April 2, 2025
அங்கன்வாடி பணிக்கு பயிற்சி

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <
Similar News
News January 10, 2026
உடுமலை அருகே விபத்து

ஆனைமலையில் இருந்து உடுமலை நோக்கி மினிவேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த பைக் மீது மினிவேன் மோதியது. இவ்விபத்தில் பைக்கில் வந்த கொடுங்கியத்தைச் சேர்ந்த தினகரன், வேதஸ்ரீ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், கோவை GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், வேதஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 10, 2026
திருப்பூர்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 10, 2026
திருமூர்த்தி அணை பகுதியில் ஆண் சடலம் மீட்பு

உடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் 71-வயது முதியவர் ரத்த காயங்களுடன் சடலமாக இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


